அஞ்சல் துறை பதிவு தபால்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய அஞ்சல் துறையின் பதிவு தபால் சேவை கட்டணத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்திய அஞ்சல் துறை 1856-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்துக் குக்கிராமங்களிலும் அஞ்சல்துறை சேவையை வழங்கி வருகிறது.

பதிவு அஞ்சல், துரித அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகளுக்கு சேரும் இடம்மற்றும் எடை கணக்கிட்டு கட்டணம்நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படு கிறது. மேலும், அரசின் அறிவிப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது வரிகள் விதிக்கப்படுகின் றன. அதன்படி, தற்போது பதிவுஅஞ்சல் சேவைகளுக்கு 18 சதவீதம்ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பதிவு தபால்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தின் படி,

* பதிவு செய்யப்பட்ட புக் பாக்கெட் ஒரு கிலோ ரூ.92.04

* புத்தக அஞ்சல் ஒரு கிலோ ரூ. 36.01

* பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் ஒரு கிலோ ரூ.315.06

* பதிவு செய்யப்பட்ட பார்சல்கள் ஒரு கிலோ ரூ. 61.36

* பதிவு செய்யப்பட்ட அச்சிட்ட புத்தகங்கள் ஒரு கிலோ ரூ.31.86

* பதிவு செய்யப்பட்ட கால இதழ் ஒரு கிலோ ரூ.54.28

* பதிவு செய்யப்பட்ட பேட்டர்ன் மற்றும் மாதிரி பாக்கெட் ஒரு கிலோ ரூ. 92.04

* பதிவு செய்யப்பட்ட நாளிதழ்கள் ஒரு கிலோ ரூ.22.78

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

3 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்