அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி - 13% உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வளர்ச்சி அக்டோபரில் 13.4% உயர்ந்து, ரூ. 1.72 லட்சம் கோடியாக உள்ளது.

டிசம்பர் 2022-க்குப் பிறகு ஜிஎஸ்டி வரிவசூல் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது. இது முன் எப்போதும் இல்லாத இரண்டாவது அதிகபட்சத் தொகையாகும். இதில், மத்திய ஜிஎஸ்டி-யின் மதிப்பு ரூ.30,062 கோடி. மாநில ஜிஎஸ்டி-யின் மதிப்பு ரூ.38,171 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மதிப்பு ரூ. 91,315 கோடி, செஸ் வரி ரூ. 2,456 கோடி. மத்திய அரசின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.72,934 கோடி, மாநில அரசின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.74,785 கோடி.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இறக்குமதி வரி உள்பட உள்நாட்டு பரிவர்த்தனை வரி வருவாய் 13% உயர்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் சராசரி மொத்த மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11% அதிகமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE