சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையொட்டி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது உயர்த்தியுள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1,898-ல் இருந்து, ரூ.1,999-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago