புதுடெல்லி: வரும் 2024 தேர்தலில் பாஜக தோற்கும்பட்சத்தில் பங்குச் சந்தைகளில் 25 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்றுஉலகப் புகழ்பெற்ற சந்தை நிபுணரான கிறிஸ் வுட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வரவிருக்கும் காலங்கள் தேர்தலுக்கானது என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். வலுவான ஆட்சி நிலையால் தற்போது சந்தை புதிய உச்சங்களை தொட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் உள்ளிட்ட நிலவரங்களால் சந்தையில் அதிகமான ஏற்ற இறக்க நிலை காணப்படுகிறது. அந்நிய முதலீடுகளும் அதிக அளவில் வெளியேறி வருகின்றன.
இந்த நிலையில், 2024-ல்நடைபெறும் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தோற்கும்பட்சத்தில் அதனால் சந்தை மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க நேரிடும். அப்போது, சந்தைகளில் 25 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படக்கூடும்.
ஆனால், அதன்பின்னர் சந்தைகளின் வேகம் படிப்படியாக சூடுபிடித்து கூர்மையாக மீண்டு எழும். எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் முதலீட்டாளர்கள் சந்தை நடவடிக்கைகளில் தங்களின் ஈடுபாட்டை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் பெரிய அளவிலான முதலீடுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கிறிஸ் வுட் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago