காஷ்மீருக்கு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து காஷ்மீர், அசாம், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கத்துக்கு விமானம் மூலமாக சுற்றுலா அழைத்து செல்ல ஐ.ஆர். சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில், பல்வேறு சிறப்பு சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து காஷ்மீர், அசாம், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முக்கிய இடங்களுக்கு விமானம் மூலமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து காஷ்மீருக்கு நவ.2-ம் தேதி சிறப்பு விமானம் புறப்படுகிறது. நகர், குல்மார்க், பஹல்கம், சோன் மார்க் ஹவுஸ் போட் ஆகிய நகரங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 6 நாட்கள் பயணத்துக்கான கட்டணம் ரூ.49,900 ஆகும். இதுதவிர, சென்னையில் இருந்து அசாம், மேகாலயாவுக்கு நவ.25ம் தேதி சிறப்பு விமானம் புறப்படுகிறது.

ஷில்லாங், சிரபுஞ்சி, காமாக்யா, குவஹாத்தி மற்றும் காஜிரங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 7 நாட்கள் பயணத்துக்கான கட்டணம் ரூ.47,500 ஆகும்.

இந்த சுற்றுலாவில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளர், பயணக்காப்பீடு ஆகியவை அடங்கியுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை அறியவும், முன்பதிவு செய்யவும் 9003140682, 8287931977 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல் ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE