தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில்பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை நேற்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மாலை தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.47,040-க்கு விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு குறித்து,சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். இதனால், தங்கம்விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இப்போர் முடியும் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE