விவசாயிகள் எவ்வித பிணையமும் இல்லாமல் ரூ.1.60 லட்சம் வரை பயிர் கடன் பெறுவது எவ்வாறு?

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயி கள் எளிதாக கடன் பெறலாம் என விழுப்புரம் வேளாண் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மரக்காணம் வட்டாரம் எண்டியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் தலைமைதாங்கினார். மாவட்ட வேளாண்துணை இயக்குநர் பெரியசாமி விவ சாயிகளுக்கு கடன் அட்டைகளை வழங்கி பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இம்மாத இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையைப் பயன்படுத்தி அந்தந்த பகுதி மண் வளத்துக்கு ஏற்ப நெல், சிறுதானி யங்கள், பயறு வகைகள், எண் ணெய் வித்துக்கள்,கரும்பு உள் ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திட வேண்டும்.

சாகுபடி செய்ய உள்ள பயிர் களுக்கு தேவையான கடன் உதவிகளை அந்தந்த பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வங் கிகளில் பெறலாம். எளிதாக கடன்பெற வேளாண் கடன் அட்டை பெறுவது அவசியம். விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளைகளில் சிட்டா, அடங் கல், ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பித்து வேளாண் கடன் அட்டை பெறலாம்.

வேளாண் கடன்அட்டை மூலம் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.1. 60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயிகள் எளிதாக கடன் பெறலாம். இவ் வாறு பெறப்படும் கடன்களுக்கு மிக குறைந்த வட்டியே வசூலிக் கப்படும். கூடுதலாக கடன் தேவைப்படும் விவசாயிகள் அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை பிணையத்துடன் கூடிய கடனை எளிதாக பெறலாம்.

வேளாண் துறை மற்றும் தோட் டக்கலைத் துறையின் மூலம் கிராமம் தோறும் விவசாயிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகி ன்றன. இதுதொடர்பாக வீடு வீடாகச்சென்று ‘இல்லம் தேடி விவசாய கடன் அட்டை' எனும் திட் டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கிளை களில் விவசாய கடன் அட்டையை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வட்டாரதொழில்நுட்ப மேலாளர் நரசிம்ம ராஜ், உதவி வேளாண் அலுவலர்கள் ஆஷா, சந்திரசேகரன், சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE