பணியிடங்களில் பெண்களைவிட அதிகமாக பதவி உயர்வு பெறும் ஆண்கள்: ஆய்வு முடிவு சொல்வது என்ன?

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பணியிடங்களில் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைய விரும்பினாலும்கூட, அவர்களுக்கு ஆண் பணியாளர்கள் அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. 2002-ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையின்படி 2022-ல் சராசரியாக 100 ஆண்கள் மேலாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில், 87 பெண்கள் மட்டுமே மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் ஷெரில் சேண்ட்பெர்க்ஸ் லியான் ஆர்க் நிறுவனமும், மெக்கின்ஸி அண்ட் கோ நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில் 100 ஆண்கள் மேலாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டபோது, 86 பெண்கள் அதே பதவி உயர்வைப் பெற்றனர். அத்துடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் 100-க்கு 87 என்றளவிலேயே சொற்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இடைவெளிக்குக் காரணம் என்ன? - இந்த மாதிரியான இடைவெளிக்குக் காரணம் என்னவென்று பார்த்தால், ஆண்களை நிறுவனங்கள் தகுதிகளின் அடிப்படையிலும், பெண்களை அவர்கள் அவர்களின் திறமைகளை ஏற்கெனவே நிரூபித்தவராக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் தேர்வு செய்கிறது என்று சேண்ட்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சிறந்த மேலாளர் என்பதை ஒருவர் அந்தப் பதவில் அமர்ந்த பின்னர்தானே நிரூபிக்க முடியும் என்றும் அந்நிறுவனம் வினவியுள்ளது.

இதே ஆண் - பெண் பதவி உயர்வு விகித்தாரச்சத்தில் கறுப்பின பெண்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. கடந்த ஆண்டு 100 ஆண்களுக்கு 54 கறுப்பின பெண்கள் மட்டுமே பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2021-ல் 96 கறுப்பின பெண்கள் பதவி உயர்வு பெற்றனர். 2019-ல் ப்ளாக் லைவஸ் மேட்டர் போராட்டங்களுக்குப் பின்னர் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் கறுப்பினத்தவரை பணியில் அமர்த்துவது அதிகரித்ததால் 2019-ல் பதவி உயர்வு பெற்ற கறுப்பினப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த ஆய்வில் 276 நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. 27 ஆயிரம் ஊழியர்கள் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

45 mins ago

வணிகம்

2 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

மேலும்