சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 286 புள்ளிகள் (0.44 சதவீதம்) சரிவடைந்து 65,226 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 92 புள்ளிகள் (0.47 சதவீதம்) சரிந்து 19,436 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை கடும் சரிவுடன் தொடங்கின. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 463.23 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,048.87 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135.80 புள்ளிகள் வீழ்ந்து 19,392.95 ஆக இருந்தது.

நீண்ட நாட்களாக நீடித்து வரும் அமெரிக்காவின் வட்டி விகிதம் குறித்த அச்சம் காரணமாக உலகளாவிய சந்தைகளில் எதிர்மறை சூழல் நிலவியது. அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளிலும் அனைத்து பங்குகளும் விற்பனை அழுத்ததில் இருந்தன. இதனுடன் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் காரணமாக இந்திய சந்தைகள் இரண்டாவது நாளாக இன்றும் வர்த்தகத்தை வீழ்ச்சியில் நிறைவு செய்தன. பங்குச்சந்தைகள் செப். 1ம் தேதி முதலான நாளில் மிகவும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 286.06 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,226.04 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 92.70 புள்ளிகள் வீழ்ந்து 19,436.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், கோட்க் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்