புதுடெல்லி: சர்வதேச சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளதாகவும், 2023-24 நிதி ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.3% ஆக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் குறித்த முதல் அரையாண்டு அறிக்கையை உலக வங்கி இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சர்வதேச சவால்கள் இருந்தபோதிலும் கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% என்ற அளவில் இருந்தது. இதன்மூலம் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஜி20 நாடுகளில் இரண்டாவது மிக உயர்ந்தது. அதோடு, வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சராசரியை விட இரு மடங்கு அதிகம். வலுவான உள்நாட்டு தேவை, வலுவான பொது உள்கட்டமைப்பு முதலீடு, வலுவான நிதித்துறை ஆகியவை காரணமாகவே இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. 2022-23 இன் முதல் காலாண்டில் வங்கிக் கடன் வளர்ச்சி 13.3% ஆக இருந்த நிலையில், அது 2023-24-இன் முதல் காலாண்டில் 15.8% ஆக அதிகரித்துள்ளது.
அதிக உலகளாவிய வட்டி விகிதங்கள், புவிசார் அரசியல் பதட்டங்கள், மந்தமான உலகளாவிய தேவை ஆகியவை காரணமாக சர்வதேச அளவில் சாதகமற்ற சூழல் தொடர்ந்து நீடிக்கும். அது மட்டுமல்ல, தீவிரமடையும் என்றும் உலக வங்கி எதிர்பார்க்கிறது. இதன் விளைவாக, சர்வதேச பொருளாதார வளர்ச்சி மெதுவான வேகத்தில் அமையும். இந்த சூழலில், 2023-24க்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என்று கணித்துள்ளோம். மேலும், சேவைத் துறை செயல்பாடு 7.4% வளர்ச்சியுடன் வலுவாக இருக்கும். முதலீட்டு வளர்ச்சி 8.9% என வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக சமீபத்திய மாதங்களில் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தது. கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த பணவீக்கம் 7.8% ஆக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் இயல்பு நிலைக்கு வருவதால் பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய நேரடி முதலீட்டின் அளவு இந்தியாவில் வளர வாய்ப்புள்ளது. 2023-24 நிதியாண்டில் நிதி ஒருங்கிணைப்பு தொடரும் என உலக வங்கி எதிர்பார்க்கிறது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% லிருந்து 5.9% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago