செப்டம்பர் மாதத்தில் 10% அதிகரித்து நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடியானது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலமாக கிடைத்த வருவாய் ரூ.1.62 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது,கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான ரூ.1.47 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் நான்காவது தடவையாக செப்டம்பரிலும் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் மொத்தம் வசூலான ஜிஎஸ்டி ரூ.1,62,712 கோடியில் மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியாகவும் இருந்தன. இவை தவிர, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியாகவும், செஸ் ரூ.11,613 கோடியாகவும் இருந்தன.

உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இதே ஆதாரங்களில் இருந்து கிடைத்த வருவாயை விட 14 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE