புரட்டாசி மாதத்தால் தேவை அதிகரிப்பு: ஈரோட்டுக்கு 900 டன் காய்கறிகள் வரத்து

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறி சந்தையில், 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, தாளவாடி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்தாகின்றன. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால், அசைவ பிரியர்கள் தற்போது சைவத்துக்கு மாறி விட்டதாலும், தொடர் விழாக்கள் நடப்பதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால், காய்கறிகள் வரத்தும் அதிகரித்துள்ளது. ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து 900 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தைக் காட்டிலும், காய்கறிகளின் விலையும், விற்பனையும் அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு காய்கறிச் சந்தையில் நேற்றைய விலை விவரம் ( கிலோவில் ): பீன்ஸ் - ரூ.90, பீர்க்கங்காய், பீட்ரூட், - ரூ.70, சின்னவெங் காயம், கேரட், - ரூ.60, முள்ளங்கி, முருங்கைக் காய் - ரூ.50, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், கத்தரிக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், காலிபிளவர் - ரூ.40, வெண்டைக் காய், முட்டைக் கோஸ் -ரூ.20, தக்காளி - ரூ.10 பழைய இஞ்சி - ரூ.290, புதிய இஞ்சி - ரூ.120.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE