ரூ.2000 நோட்டுகளை மாற்றும் காலக்கெடு நாளையுடன் நிறைவு: பெட்ரோல் பங்க், பேருந்துகளில் வாங்கப்படாது

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் நாளையுடன் (செப். 30) நிறைவடைகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (பங்க்), அரசு, ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து, வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றி வந்தனர். இதுதவிர, அரசு, தனியார் பேருந்துகளிலும், பெட்ரோல் பங்க்குகளிலும் ரூ.2000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொண்டனர்.

இந்நிலையில், வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு நாளையுடன் (செப்.30) நிறைவடைகிறது. இதையடுத்து, அரசு, தனியார் பேருந்துகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பெட்ரோல் பங்க்) ரூ.2000 நோட்டுகளை பெறுவது நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம், பேருந்து நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், செப். 28-ம் தேதிக்கு பிறகு, பேருந்துகளில் பயணிக்க பொதுமக்கள் ரூ.2000 நோட்டுகளை கொடுத்தால், வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதும் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ரூ.2000 வாங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பெட்ரோலிய விற்பனை உரிமையாளர் சங்கத் தலைவர் முரளி கூறும்போது, ‘‘ரூ.2000 நோட்டுகளை மாற்ற 2 நாட்கள் மட்டுமே காலக்கெடு உள்ளது. செப். 29, 30-ம் தேதிகளில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளோம்’’ என்றார்.

இதுபோல, ஆம்னி பேருந்துகளிலும் இன்று முதல் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்