சென்னை: உத்தராகண்டில் விரைவில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி லண்டனுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்தித்து வருகிறார்.
முதல்வர் தாமியின் பிரிட்டன் பயணம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. அப்போது முதல்வர் முன்னிலையில் 2 நிறுவனங்களுடன் ரூ.3000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அகர் டெக்னாலஜி நிறுவனம்: உத்தராகண்டில் லித்தியம் அயர்ன் பேட்டரி ஆலைகளில் முதலீடு செய்ய அகர் டெக்னாலஜி நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்காக அந்நிறுவனத்துடன ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதேபோல ஐரோப்பாவின் ஃபிரா பார்சிலோனா நிறுவனத் துடன் ரூ.1000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது. ஃபிரா பார்சிலோனா குழுமம் அங்கு மதிப்பு வாய்ந்த குழுமமாகும்.
மேலும் உத்தராகண்டை உலக சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ஆன்லைன் பயண திரட்டியாக பணியாற்றும் வகையில் ஈஸ் மை ட்ரிப் நிறுவனத்துடன் 2 ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
37 mins ago
வணிகம்
52 mins ago
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago