ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய பங்குச்சந்தை 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்ற இறக்கமின்றி தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்து 66,031ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 19,680 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கின. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 66,012.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி11.35 புள்ளிகள் உயர்ந்து 19,685.90 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்கள், முந்தைய பலவீனமான குறிப்புகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றயை வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், என்டிபிசி, எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், பவர்கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, ரிஸையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் கம்பெனி, விப்ரோ பங்குகள் உயர்வில் இருந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா பேங்க், இன்ட்ஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE