லெக்ட்ரிக்ஸ் மின் ஸ்கூட்டர் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்ஏஆர் குழுமத்தின் மின்சார வாகனங்கள் தயாரிப்பு பிரிவான லெக்ட்ரிக்ஸ் இவி " எல்எக்ஸ்எஸ் ஜி2.0” என்ற புதிய மின் ஸ்கூட்டரை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.விஜய குமார் கூறியதாவது:

93 புதிய அம்சங்களுடன் கூடிய ‘‘எல்எக்ஸ்எஸ் ஜி2.0” மின் ஸ்கூட்டர் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு என வெகிக்கிள் லைவ் லொகேஷன், பேட்டரி டெம்பரேச்சர் உள்ளிட்ட 29 புதிய அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளன.

இதன் விலை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 65 முதல் 80 கி.மீ. வரை இந்த ஸ்கூட்டரில் பயணிக்க முடியும். ஸ்கூட்டரின் இருப்பிடம், பேட்டரியின் நிலை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் மொபைல் வழியாகவே கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப வசதி இந்த புதிய வகை மின் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்து புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதற்காக, வரும் 2024-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 300 விற்பனை நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விஜய குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE