ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி - சென்னையில் புதிய மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அதன் பிரைவேட் பேங்கிங் மையத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஐந்தாவதாக சென்னையில் அதன் புதிய மையத்தைத் திறந்துள்ளது.

பிரைவேட் பேங்கிங் என்பது அதிக சொத்து மதிப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கென்று தனித்துவமாக வழங்கப்படும் வங்கி சேவையாகும். 30 மில்லியன்டாலருக்கு (ரூ.250 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் மிக அதிக சொத்து மதிப்பு பிரிவின் கீழ் வருவர்.

புதிய மையம் குறித்து வங்கியின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர் நிதின் செங்கப்பா கூறுகையில், “தமிழ்நாட்டில் தற்போது 30 மில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 65 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவிலும் அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு, கேரளா: இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை வழங்கும் நோக்கில் சென்னையில் பிரைவேட் பேங்கிங் மையத்தைத் திறந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE