மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன. சென்செக்ஸ் 52 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயர்வடைந்து 67,519 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்ந்து 20,103 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்தன. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 30.43 புள்ளிகள் உயர்வடைந்து 67,497.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.85 புள்ளிகள் உயர்ந்து 20,111.85 ஆக இருந்தது. முன்னதாக 9.32 மணியளவில் சென்செக்ஸ் 250.18 புள்ளிகள் உயர்ந்து 67,717.17 ஆகவும் நிஃப்டி 81.25 புள்ளிகள் உயர்வடைந்து 20,151.25 ஆகவும் இருந்தது.
இதுவரையில்லாத அளவில் காலை வர்த்தகத்தில் புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் பின்னர் சரிவைச் சந்தித்து நிலையில்லாமல் பயணித்தது. வங்கி, வாகனம் மற்றும் ரியாலிட்டி பங்குகள் இன்றயை லாபத்துக்கு உதவின என்றாலும் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தன. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 67,771 ஆகவும், நிஃப்டி 20,168 ஆகவும் உயர்ந்திருந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ்52.01 புள்ளிகள் உயர்வடைந்து 67,519.00 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.10 புள்ளிகள் உயர்ந்து 20,103.10ஆக இருந்தது.
» செப்.14, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை - சவரன் 43,840-க்கு விற்பனை
» புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை | சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்வு
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி, என்டிபிசி, மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago