புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை | சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தை இன்று காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 30.43 புள்ளிகள் உயர்வடைந்து 67,497.42 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து 67,658 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 20,131 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தன. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 30.43 புள்ளிகள் உயர்வடைந்து 67,497.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.85 புள்ளிகள் உயர்ந்து 20,111.85 ஆக இருந்தது. முன்னதாக 9.32 மணியளவில் சென்செக்ஸ் 250.18 புள்ளிகள் உயர்ந்து 67,717.17 ஆகவும் நிஃப்டி 81.25 புள்ளிகள் உயர்வடைந்து 20,151.25 ஆகவும் இருந்தது.

ஆகஸ்ட் மாதத்துக்கான அமெரிக்க நுகர்வோர் விலைக்குறியீடு எதிர்ப்பார்த்தைப் போல உயர்ந்தது முதலீட்டாளர்களின் உணர்வுகளைத் தூண்டியது. இதனால் பிற ஆசிய சந்தைகளின் நேர்மறையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தகம் தொடங்கிய சில மணிநேரத்தில் புதிய உச்சத்தை எட்டியது. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் ஏற்ற இறக்கமின்றி பயணித்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், விப்ரோ, எம் அண்ட் எம், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி பங்குகள் உயர்வில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்