சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 245 புள்ளிகள் (0.37 சதவீதம்) உயர்வடைந்து 67,466 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி76 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்ந்து 20,070 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயை தொடங்கின. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 14.57 புள்ளிகள் சரிவடைந்து 67,206.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37.85 புள்ளிகள் சரிந்து 19,955.35 ஆக இருந்தது.

சில்லறை பணவீக்கம் ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்த போதிலும் ஏற்ற இறக்கமில்லாத தட்டையாக வர்த்தகத்தை தொடங்கி, தொடர்ந்து தடுமாறிய இந்திய பங்குச்சந்தைகள் பின்னர் மீண்டெழுந்து புதன்கிழமை ஏற்றத்தில் நிறைவடைந்தன. அரசு மற்றும் தனியார் வங்கிப் பங்குகளின் எழுச்சி இன்றைய ஏற்றத்துக்கு உதவின. நிஃப்டி முதல்முறையாக 20,000-ஐ கடந்து நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 245.86 புள்ளிகள் உயர்வடைந்து 67,466.99 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 76.80 புள்ளிகள் உயர்ந்து 20,070.00 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

எம் அண்ட் எம், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டிசிஎஸ், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

46 mins ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்