மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியிருந்தது. சென்செக்ஸ் 528 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயர்வடைந்து 67,127 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 176 புள்ளிகள் (0.89 சதவீதம்) உயர்ந்து 19,996 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 307.50 புள்ளிகள் உயர்வடைந்து 66,906.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 104.20 புள்ளிகள் உயர்ந்து 19,924.15 ஆக இருந்தது.
ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, ஹெவிவெயிட் பங்குகளின் ஏற்றம், வலுவான நிதிவரவு மற்றும் நுண்பொருளாதாரத்தின் வலுவான குறிப்புகள் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் 7-வது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது. வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு நிஃப்டி 20,005 ஆக இருந்தது. சென்செக்ஸ் 67,000 கடந்தது. அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்தில் நிறைவடைந்திருன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 528.17 புள்ளிகள் உயர்வடைந்து 67,127.08 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 176.30 புள்ளிகள் உயர்ந்து 19,996.30 ஆக இருந்தது.
» சென்னையில் மிகப் பெரிய ஷாப்பிங் மால் அமைக்க திட்டம்: லுலு குழும தலைவர் யூசுஃப் அலி தகவல்
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்ரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, டிசிஎஸ், ஜெஎஸ்டபில்யூ ல்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன. எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago