மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வடைந்து 65,830 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 19,589 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. பின்னர் சரிவடையத் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.94 புள்ளிகள் சரிவடைந்து 65,761.32 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.75 புள்ளிகள் உயர்ந்து 19,574.15 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் குழப்பமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் தட்டையாகத் தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சரியத் தொடங்கியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டர்ஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் உயர்வில் இருந்தன.
டாடா ஸ்டீல், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago