ஏப்ரல்-ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ஜிடிபி 7.8 சதவீத வளர்ச்சி: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் 2023-24 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ஜிடிபி 13.1 சதவீதமாக இருந்தது.

வேளான் துறையின் வளர்ச்சி 3.5% வளர்ச்சி அடைந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது 2.4% ஆக இருந்தது. அதேசமயம், உற்பத்தித் துறையில் வளர்ச்சி 6.1-லிருந்து 4.7% ஆக குறைந்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8% ஆக உள்ள நிலையில் சீனாவின் ஜிடிபி 6.3% ஆக உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு சேவைத் துறையின் வளர்ச்சியும் மத்திய அரசின் மூலதன செலவினமும் முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதிலும், இந்தியாவில் சேவைத் துறை வளர்ச்சி குறிப்பிடும்படியாக உள்ளது என எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்