புதுடெல்லி: மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் பிஎஸ் 6 மாடல் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிமுகப்படுத்தினார். இது மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்படுகிறது. அதை 20% ஆக அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம் சில இடங்களில் 20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025-க்குள் நாடு முழுவதுவம் 20% எத்தனால் கலப்பு பெட்ரோலை பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் இனோவா ஹைகிராஸ் காரை மின்சாரத்திலும் 100% எத்தனாலிலும் இயங்கும் வகையிலான ஹைபிரிட் காராக உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 40% மின் வாகனங்களும் 60% எத்தனால் கலப்பு எரிபொருளும் பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பெட்ரோல் விலை ரூ.15 ஆக குறையும் என்று நிதின் கட்கரி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago