சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் எக்ஸ்ட்ராடெஜ் எல்பிஜிசிலிண்டரின் விளம்பர தூதராகபிரபல சமையல் கலை நிபுணர்சஞ்ஜீவ் கபூர் நியமிக்கப்பட்டுஉள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக இண்டேன் எக்ஸ்ட்ராடெஜ் என்ற சிலிண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிலிண்டரை பயன்படுத்தும் போது 5 சதவீதம் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்த சிலிண்டரின் விளம்பர தூதராக பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்ஜீவ் கபூர்நியமிக்கப்பட்டுள்ளார். அவர்இப்புதிய சிலிண்டரை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல்இயக்குநர் (எல்பிஜி) கே.சைலேந்திரா, ``இந்தியன் ஆயில் நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுப் பிரிவு மூலம் அவ்வப்போது புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது புதிதாகஎக்ஸ்ட்ராடெஜ் என்ற புதியசிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதிக அழுத்தம் கொண்ட ரெகுலேட்டர்கள் மற்றும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் குழாய்கள் அறிமுகப்படுத்தப்படும்'' என்றார்.
சமையல் கலைஞர் சஞ்ஜீவ் கபூர் பேசுகையில், ``இந்தியன் ஆயில் நிறுவனம் செலவை மிச்சப்படுத்தும் வகையில் புதிய சிலிண்டரைஅறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது'' என்றார். விழாவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் சதீஷ் குமார் (மார்க்கெட்டிங்) இண்டேன் எக்ஸ்ட்ராடெஜ் சிலிண்டர் தொடர்பான வீடியோவை வெளியிட்டார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago