பருவமழை பற்றாக்குறையால் பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த தக்காளி விலை சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எதிரான போராட்டத்தில் அடுத்தப் பிரச்சினையாக பருப்பு விலை ஏற்றம் இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு காரிஃப் பருவத்தில் பருப்பு பயிரிடுதல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பாதியளவாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலிவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15 மாதங்கள் இல்லாத அளவில் ஜூலையில் 7.5 சதவீதமாக அதிகரித்தது.

கடந்த ஜூலையில் 34.1 சதவீதம் விலையுயர்ந்த துவரம் பருப்பும், 9.1 சதவீதம் விலை உயர்ந்த பாசிப்பருப்பும் இனி மேலும் விலை உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். நடப்பு காரிஃப் பருவத்தில் 114.9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டாலும், போதிய மழை இல்லாததால் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது எனக் கூறுகின்றனர்.

அதேவேளையில் அரிசி உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் விகிதம் கடந்த சில வாரங்களுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இதனால் அரிசி, தானியங்கள் விலை வரவிருக்கும் காலத்தில் குறையும் என்று கணிக்கின்றனர்.

இந்நிலையில் பருப்பு விலை ஏற்றத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து பரோடா வங்கியின் பொருளாதார நிபுணர் ஜான்வி பிரபாகர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "பருப்பு விதைக்கும் காலமே முடியும் தருவாயில் உள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட 9.2 சதவீதம் அளவு குறைவான ஏக்கரில் பருப்பு பயிரிடப்பட்டுள்ளது. இதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது ஆகிறது.

ஆகஸ்ட் 18 உடன் முடிவடைந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை 6 சதவீதத்துக்கும் குறைவாகவே பெஉதுள்ளது. உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வழக்கத்தைவிட மிக மிகக் குறைவாகப் பெய்துள்ளது. அதேபோல் நாட்டின் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவும் ஆகஸ்ட் 17 நிலவரப்படி 62 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்த்தேக்கங்களில் இருந்த நீரின் அளவு 76 சதவீதமாக இருந்துள்ளது.

மத்திய இந்தியாவில் தென் மேற்குப் பருவமழை சராசரியைவிட 3 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. தென் பகுதியில் 13 சதவீதம், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் 20 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. போதிய பருவமழை பெய்யாதது, பருப்பு விதைக்கப்பட்ட பரப்பளவு கணிசமாகக் குறைந்துள்ளதும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு விலையை அதிகரிக்கச் செய்யும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்