மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 202 புள்ளிகள் (0.31 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 64,948 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55 புள்ளிகள் (0.28 சதவீதம்) வீழ்ந்து 19,310 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 303.23 புள்ளிகள் சரிவடைந்து 64,847.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 97.60 புள்ளிகள் சரிந்து 19,267.65 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவும் பலவீனமான சூழல்களுக்கு மத்தியில், தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியல் எஸ்டேட் பங்குகளின் சரிவு இந்திய பங்குச்சந்தைகளை வீழ்ச்சியுடன் நிறைவடையச் செய்தன. இன்றைய இன்ட்ரா வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 64,755 ஆகவும், நிஃப்டி 19,254 ஆகவும் சரிவடைந்திருந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 202.36 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,948.66 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55.10 புள்ளிகள் வீழ்ந்து 19,310.20 ஆக இருந்தது.
» கேரள வியாபாரிகள் வராததால் ஆயக்குடியில் கொய்யா விலை வீழ்ச்சி: கிலோ ரூ.13-க்கு விற்பனை
» ஆக.18, 2023 | தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லை; சவரன் ரூ.43,640 க்கு விற்பனை
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
ஐடிசி, டெக் மகேந்திரா, இன்போசிஸ், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்,ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago