ஆடிப்பெருக்கு: கோவையில் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை

By இல.ராஜகோபால்

கோவை: ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு கோவையில் நேற்று ஒரே நாளில் ரூ.120 கோடி மதிப்பில் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆடிப் பெருக்கு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடி 18-ம் தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை காரணமாக நேற்று கோவை மாநகரில் தங்க நகைக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவை தங்க நகை தயாரிப்பா ளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராமன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ஆடி மாதம் 1-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினமும் சராசரியாக 70 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.

ஆடிப் பெருக்கு தினமான நேற்று கோவை மாவட்டம் முழுவதும் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.120 கோடியாகும். பெரும்பாலும் சிறிய ரக நகைகளான மோதிரம், தோடு, குறைந்த சவரனில் தயாரிக்கப்பட்ட செயின் உள்ளிட்ட நகைகள் தான் அதிகம் விற்பனை செய்யப் பட்டன. இவற்றை தவிர்த்து வளையல்கள், ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளும் விற்பனை செய்யப்பட்டன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்