ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்: ரூ.1.65 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 11% அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து 6-வது முறையாக ஜிஎஸ்டி வசூலானது ரூ.1.6 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு, வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பும், வரி ஏய்ப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே காரணம்.

நடப்பாண்டு ஜூலையில் மொத்தம் வசூலான ரூ.1,65,105 கோடி ஜிஎஸ்டியில், சிஜிஎஸ்டி ரூ.29,773 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.37,623 கோடியா கவும், ஐஜிஎஸ்டி ரூ.85,930 கோடியாகவும் இருந்தன. செஸ் மூலமான வசூல் ரூ.11,779 கோடியாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE