புனே: பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.200 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 62 சதவீதம் அதிகம் ஆகும்.
பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வங்கியல்லாத நிதி நிறுவனம். இந்நிறுவனம் முதன்மையாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கி வருகிறது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டு அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் உயர்ந்து ரூ.200 கோடியாக உள்ளது. அதேபோல், வாராக் கடன் 0.76 சதவீதமாக குறைந்துள்ளது.
சொத்து மீதான வருமானம் 4.8 சதவீதமும், நிகர வட்டி வருவாய் 11.4 சதவீதமும் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபய் புட்டா கூறுகையில், “நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தி நிர்வாகச் செலவினங்களைக் குறைத்துள்ளோம். நிறுவன வளர்ச்சி அதிகரித்திருப்பதற்கு இது முக்கியக் காரணமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago