புதுடெல்லி: இந்திய நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தில் தங்கள் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் எளிதாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற முடியும்.
குஜராத்தில் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் சர்வதேச நிதி சேவை மையம் (ஐஎஃப்எஸ்சி) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வழியாக இந்திய நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடலாம்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ‘குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில்’ (ஜிஐஎஃப்டி) 2015-ல் சர்வதேச நிதி சேவை மையம் (ஐஎஃப்எஸ்சி) அமைக்கப்பட்டது. இதற்கான ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு 2020-ல் உருவாக்கியது. இதைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் தங்கள் கடன் பத்திரங்களை ஐஎஃப்எஸ்சி-யில் பட்டியலிட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்குபல்வேறு தேசியவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஐஎஃப்எஸ்சி சார்ந்து புதியமுன்னெடுப்புகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது ஐஎஃப்எஸ்சி-யில் இந்திய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பட்டியலிட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். “இந்திய பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்கள் மட்டுமல்ல பட்டியலாகாத நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் ஐஎஃப்எஸ்சி வழியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் நேரடியாக தங்கள் நிறுவனங்களை பட்டியலிட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் சர்வதேச முதலீட்டை எளிதாக பெற முடியும். இதனால், இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயரும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago