புதுடெல்லி: இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் செமிகண்டக்டர் தயாரிப்பில் முக்கிய நாடாக உருவாகும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தற்போது உலக நாடுகள் மின்னணு வாகனங்கள் நோக்கி நகர்ந்து வருகிற நிலையில், செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா அதன் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
செமிகண்டக்டர் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ரூ.6,700 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்தியா செமிகண்டக்டர் தயாரிப்பில் அடுத்த 10 ஆண்டுகளில் முக்கிய நாடாகமாறும் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து mமேலும் அவர் கூறுகையில், “உலகநாடுகள் செமிகண்டக்டர் தயாரிப்புக்கு ஏற்ற நாடாக இந்தியாவை பார்க்க ஆரம்பித்துள்ளன.
» சென்னை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: ஹாக்கிக்கு வந்த ‘பொம்மன்’
» சென்னை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தமிழகத்திலிருந்து தனி ஒருவன்!
செமிகண்டக்டர் துறையை ஊக்குவிக்க மத்திய அரசு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 10 பில்லியன் டாலர் (ரூ.82,000 கோடி) நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அடுத்த பத்து ஆண்டுகளில் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவை முக்கிய நாடாக மாற்றும். இதன் மூலம், சீனா செமிகண்டக்டர் துறையில் 25 ஆண்டுகளில் சாதிக்காததை இந்தியா 10 ஆண்டுகளில் சாதிக்கும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
38 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago