மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்வடைந்து 66,914 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 19,846 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85.33 புள்ளிகள் உயர்வடைந்து 66,792.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
28.35 புள்ளிகள் உயர்ந்து 19,806.65 ஆக இருந்தது.
அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 25 பிபிஎஸ் உயர்த்திய நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. மருந்து நிறுவனப்பங்குகளின் ஏற்றம் சந்தைகளின் உயர்வுக்கு வழிவகுத்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல்ஸ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.
» சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்வு
» ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் இருந்து பிரிக்கக் கோரி பிரதமருக்கு வீடியோ கேமிங் நிறுவனங்கள் கடிதம்
எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago