புதுடெல்லி: நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தமாக 7.4 கோடி பேர் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் ஆகும்.
நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், 2022-23 நிதிஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்தவர்களின் எண்ணிக்கை 6.18 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல், குறுஞ்செய்தி “2022-23 நிதி ஆண்டில் மொத்த 7.4 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 5.16 கோடி பேருக்கு வரி எதுவும் இல்லை. 2021-22 நிதி ஆண்டில் 6.94 கோடி, 2020-21 நிதி ஆண்டில் 6.72 கோடி, 2019-20 நிதி ஆண்டில் 6.47 கோடி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐடிஆர் விண்ணப்பிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வரிதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன”என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago