பிரசவத்திற்கு பிறகும் பெண்கள் பணியை தொடர வேண்டும்: ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சாந்தா கொச்சார் அறிவுரை

By என்.மகேஷ் குமார்

பணிக்கு செல்லும் பெண்கள், பிரசவத்திற்கு பிறகும் தங்களது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஹைதராபாத்தில் ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் சர்வதேச தொழில்முனைவோர் உச்சி மாநாடு நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் மற்றும் மகளுமான இவாங்கா ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

2-வது நாளாக நேற்று நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவு கருத்தரங்கில் கலந்து கொண்ட ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் கூறியதாவது: பணிக்கு சென்று தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெண்களில் சிலர், தாய்மை அடைந்து, பிரசவம் ஆன பின்னர் ஏனோ பணியை விட்டு விலகி விடுகின்றனர். பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பணியைத் தொடர வேண்டும். பொருளாதார மாற்றம், பெண்களை சொந்த தொழில் செய்ய உந்துகிறது.

விளையாட்டுத் துறை மட்டுமின்றி, வங்கிகள், அரசு பணிகளில் அதிகமாக பெண்கள் பணியாற்றுவது அவர்களின் திறமையை பறைசாற்றுகிறது. இந்தியாவில் 40 சதவீதம் வங்கிகள் பெண் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிகப் பெரிய சாதனை. வங்கிகளுக்கு மறு முதலீடு அளிப்பது மிக முக்கியமானது. அது மிக நேர்மறையான முடிவு. வங்கிகளுக்கு மறு முதலீடு அளிப்பதால் அவர்களின் தொழில் வளர்ச்சி மேம்படும் என்று சாந்தா கொச்சார் கூறினார்.

ஐசிஐசிஐ வங்கியில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது ஏன் என்று கேட்டதற்கு, ``ஆண்களை விட பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்’’ என்று சாந்தா கொச்சார் பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

மேலும்