`ரெப்கோ-400’ புதிய வைப்பு நிதி திட்டம்: ரெப்கோ வங்கியில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரெப்கோ வங்கியின் தியாகராய நகர் கிளையில் சிறப்பு வைப்பு நிதி திட்ட முகாம் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கப்பட்டது.

வரும் ஆக. 31-ம் தேதி வரை இம்முகாம் நடைபெறும். பொது மேலாளர் ஓ.எம்.கோகுல் முகாமை தொடங்கி வைத்தார். தி.நகர் கிளை இணை பொது மேலாளர் வி.கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரெப்கோ வங்கியில் ‘ரெப்கோ-400’ என்ற புதிய வைப்பு நிதி முதலீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 400 நாட்களுக்கு வைக்கப்படும் வைப்பு நிதி முதலீட்டுக்கு 8.25 சதவீதம் வட்டி விகிதமும் மற்றவர்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படும்.

இதில் மாதாந்திர காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் வட்டி பெறும் வசதி உள்ளது. மேலும் நகைக் கடன் மற்றும் வீட்டு அடமானக் கடனும் எல்லா வேலை நாட்களிலும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பொது மேலாளர் ஓ.எம்.கோகுல் கூறும்போது, “ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.17,846 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டு வர்த்தக இலக்கான ரூ.20,200 கோடியை அடைவதே நமது நோக்கம்” என்றார். ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE