இ-சிகரெட்டுகளை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுவந்த 15 இணைய தளங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விளம்பரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், சில இணைய தளங்கள் இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு விற்பனையில் ஈடுபட்டுவந்த 15 இணையதளங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உங்கள் இணையதளம் இ-சிகெரட் விற்பனை, விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடுகிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட தையடுத்து, 4 இணையதளங்கள் விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் மற்ற நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலளிக்காத இணையதளங்கள் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட் மீதான தடையை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்