ராதாத்ரி நேத்ராலயாவுக்கு ரெட்டினல் கேமரா வழங்கிய ஃப்ரீமேசன்ஸ் கிராண்ட் லாட்ஜ் ஆஃப் இந்தியா

By செய்திப்பிரிவு

சென்னை: ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனையின் விஷன் ஆன் வீல் திட்டத்தின் பயன்பாட்டுக்காக ஃப்ரீமேசன்ஸ் கிராண்ட் லாட்ஜ் ஆஃப் இந்தியா அமைப்பு ரெட்டினல் கேமரா ஒன்றை வழங்கியுள்ளது.

எழும்பூரில் உள்ள ஃப்ரீமேசன்ஸ் ஹாலில் கடந்த மாதம் நடந்த நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், ஃப்ரீமேசன்ஸ் கிராண்ட் லாட்ஜ் ஆஃப் இந்தியாவின் பிராந்திய கிராண்ட் மாஸ்டர் அனிஷ் குமார் சர்மா, தென்னிந்திய கிராண்ட மாஸ்டர் டிஎன் மனோகரன் ஆகியோரிடமிருந்து ராதாத்ரி நேத்ராலயாவின் இயக்குனர்களும், ஜிவிஆர்எஃப் அறக்கட்டளையின் ட்ரஸ்டீக்களான மருத்துவர்கள் பிரவீன் கிருஷ்ணா மற்றும் வசுமதி வேதாந்தம் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

ராதாத்ரி நேத்ராலயாவின் பொது அறக்கட்டளையான குருப்பிரியா விஷன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் உறுதுணையுடன் நடக்கும் ‘விஷன் ஆன் வீல்ஸ்: ரூரல் டெலியோபத்ல்மாலஜி’ திட்டத்தின் பயன்பாட்டுக்காக இல்ந்த ரெட்டினல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஃப்ரீமேசனுக்கு நன்றி தெரிவித்து பேசிய வசுமதி விஷன் ஆன் வீல்ஸ் திட்டம் குறித்து சிறிய விளக்கமளித்தார் அவர் கூறுகையில், "கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள 65,000 பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களின் குழந்தைகளை பரிசோதித்து, அவர்களில் 4000 குழந்தைகளுக்கு குறைப்பிரசவத்தால் ஏற்படும் ரெட்டினோபதி (ஆர்ஓபி) என்ற பார்வைக்குறைபாடு நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விஷன் ஆன் வீல்ஸ் என்பது டெலியோபதல்மாலஜி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ரெட்டினோபதி குறைபாட்டை கண்டறியும் ஒரு புதிய முயற்சியாகும். இது தொலைதூர ஊரகப்பகுதிகளில் உள்ள குழந்தைகளில் இருக்கும் ஆர்ஓபி குறைப்பாட்டை இயந்திரம் மற்றும் மனித கூட்டு முயற்சியுடன் கண்டறியும் தனித்துவமான அணுகுமுறையாகும். இந்தக் குறைபாட்டை ஆரம்பத்தில் கண்டறியவில்லை என்றால், அது பார்வையிழப்புக்கு வழிவகுக்கும்.

ஃப்ரீமேசன் வழங்கியிருக்கும் இந்த ரெட்டினல் காமிரா எங்கள் திட்டத்தினை இன்னும் சிறகுகள் விரிக்கச் செய்து, சமூகத்தில் பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவ வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE