புதுடெல்லி: நிதி மோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள், ஜிஎஸ்டி நெட்வொர்க்கை சேர்க்க எதிர்க்கட்சிகள் ஆளும்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் 66-வது பிரிவின் கீழ் மத்திய அரசு சில மாற்றங்களை செய்தது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தீவிர மோசடி புலனாய்வுபிரிவு, மத்திய ஊழல் கண்காணிப்புஆணையம் உட்பட மத்திய அரசின் 15 விசாரணை அமைப்புகள் நிதிமோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இந்தஅமைப்புகள், அமலாக்கத் துறையிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் ஜிஎஸ்டி மோசடிகளும் அதிகளவில் நடைபெற்றன. இதனால் ஜிஎஸ்டி அடையாள எண்களை சரிபார்க்கும் பணி கடந்த மே16-ம் தேதி முதல் 2 மாதங்கள் நடந்தன. இதில் 69,600 சந்தேகஜிஎஸ்டி அடையாள எண்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 59,000 ஜிஎஸ்டி அடையாள எண்கள்சரிபார்க்கப்பட்டன. இதில் 25 சதவீத எண்களின் நிறுவனங்கள் இல்லை என தெரியவந்தது. ஜிஎஸ்டிவரி மோசடி, போலிப் பதிவு அதிகம்நடைபெறுவதால், ஜிஎஸ்டி நெட்வொர்க்கை நிதி மோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள் கொண்டுவரும் அறிவிப்பை மத்திய அரசு கடந்த 7-ம் தேதி வெளியிட்டது. இதன் மூலம் ஜிஎஸ்டி நெட்வொர்க் தகவல்கள் அமலாக்கத்துறை மற்றும் இதர விசாரணைஅமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அப்போது, முறையான ஆலோசனை நடத்தாமல் நிதிமோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள் ஜிஎஸ்டி நெட்வோர்க் சேர்க்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
» வடமாநிலங்களை புரட்டிப்போடும் பருவமழை | தத்தளிக்கும் டெல்லி, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம்
ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றுக்கு 28 % வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திரையரங்குகளில் உள்ள உணவு விடுதிகளுக்கான ஜிஎஸ்டி 18-லிருந்து 5 சதவீதமாக குறைக் கப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்தான டினுடக்சிமேப்-ஐ இறக்குமதி செய்யவும்அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுக்கும் ஜிஎஸ்டிவரியிலிருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago