சென்னை: நம்பகமான மற்றும் முன்னணி சில்லறை நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், தனது துணை பிராண்டான மைன் டைமண்ட் ஜுவல்லரி மூலம் தற்போது `ஸ்பார்க்கிள் ஆஃப் ஹெவன்' என்ற புதிய நகை கலெக்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.
நவீன பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நகை கலெக்ஷன் மிக நுட்பமான வடிவமைப்புக்குள் திறமையாக பல்வேறு வடிவங்களில் பொருத்தப்பட்ட வைரங்களைக் கொண்டுள்ளது. வெறும் ரூ.30 ஆயிரம் என்ற ஆரம்ப விலையுடன் எளிமையான நெக்லஸ்கள், காதணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ் லெட்கள் மற்றும் பல வகையான நகைகள் கிடைக்கின்றன. இவை அனைத்து விதமான விழாக்களுக்கும் சிறந்த பொருத்தமான தேர்வாக இருக்கும். பல்வேறு வகையான விருப்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான தருணங்களுக்குப் பொருத்தமான நகைகளாக இவை உள்ளன.
புதிய நகை கலெக்ஷன் அறிமுகம் குறித்து மலபார் குழுமத்தலைவர் எம்.பி.அகமது கூறும்போது, ``எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக `ஸ்பார்க்கிள் ஆஃப் ஹெவன்'-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த நகை கலெக்ஷன் மலபாரின் பிற தனிப்பட்ட நகை கலெக்ஷன்கள் போலவே பிரமாதமான தேர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் மிகவும் மலிவு விலையில் வைர நகைகளை உருவாக்கும் எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெல்லும்'' என்றார். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago