மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 505 புள்ளிகள் (0.77 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,280 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 165 புள்ளிகள் (0.85 சதவீதம்) வீழ்ந்து 19,331 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை சற்றே சரிவுடன் தொடங்கிய போதிலும் பின்னர் ஏற்றமடையத் தொடங்கியது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 15.64 புள்ளிகள் உயர்வடைந்து 65,801.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.75 புள்ளிகள் உயர்ந்து 19,510.05 ஆக இருந்தது.
வலுவான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகப்படுத்தலாம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் லாபம் ஈட்டும் நோக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. இன்ட்ரா வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 65,176 வரையிலும், நிஃப்டி 19,332 வரையிலும் சரிவடைந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 505.19 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,280.45 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 165.50 புள்ளிகள் உயர்ந்து 19,331.80 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
பவர்கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மகேந்திரா, எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடக் மகேந்திரா பேங்க், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
45 mins ago
வணிகம்
2 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago