ஓசூர் பகுதியில் பருவ நிலை மாற்றம் நோய் தாக்கத்தால் பீன்ஸ் மகசூல் 20% பாதிப்பு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் பீன்ஸ் கொடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதி விவசாயி கள் நீண்ட நாள் பயிர் சாகுபடிக்கு மாற்றாகக் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.

இங்கு அறுவடையாகும் பீன்ஸ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், பருவ நிலை மாற்றத்தால் பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஓசூர் பகுதி விவசாயி ராமைய்யா கூறியதாவது: ஓசூர் பகுதியில் நல்ல மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன. அதேநேரம் உரிய ஆலோசனை இல்லாததால் தரம் இல்லாத விதை, மருந்து, பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது. ஒரு ஏக்கர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் பந்தல் அமைத்தல் என ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. தற்போது, சந்தையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், மகசூல் பாதிப்பால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஓசூர் பகுதியில் பீன்ஸ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் உரிய தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் நோய் பாதிப்பின்போது, கட்டுப்படுத்த உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்