சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை புதிய சாதனை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 274 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்வடைந்து 65,479 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66 புள்ளிகள் (0.34 சதவீதம்) உயர்ந்து 19,389 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 280.68 புள்ளிகள் உயர்வடைந்து 65,485 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.90 புள்ளிகள் உயர்ந்து 19,396 ஆக இருந்தது.

இன்றைய பங்குச்சந்தை புதிய உச்சத்தில் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின்போது நிலையில்லாமலே பயணித்தது. நிலையான வெளிநாட்டு நிதி வரவு பங்குச்சந்தைகளை தினமும் உச்சத்துக்கு உயர்த்தி முதலீட்டாளர்களிடம் வாங்கும் எண்ணத்தைத் தூண்டி வருகின்றன. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 65,673 வரையிலும், நிஃப்டி 19,389.00 வரையிலும் உயர்வடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 274.00 புள்ளிகள் உயர்வடைந்து 65,479.05 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66.50 புள்ளிகள் உயர்ந்து 19,322.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டைட்டன் கம்பெனி, விப்ரோ, டிசிஎஸ், கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்ந்து இருந்தன.

பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம் கார்ப்பரேஷன், பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 mins ago

வணிகம்

44 mins ago

வணிகம்

2 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்