BMW M 1000 RR இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய சாலைகளில் ‘வ்ரூம்… வ்ரூம்’ என றெக்கை கட்டி சீறி பாயும் வகையில் BMW M 1000 RR பைக் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 1923 முதல் உலகம் முழுவதும் தங்களது BMW மோட்டார்ராட் (Motorrad) பிராண்டின் கீழ் தயாரிக்கபப்டும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது BMW நிறுவனம். இந்நிலையில், இப்போது இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் M 1000 RR பைக் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இது அந்நிறுவனத்தின் S 1000 RR ரேஸ் பைக்கின் மேம்படுத்தப்பட்ட வர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் M 1000 RR பைக் ஸ்டேன்டர்ட் மற்றும் காம்பெடிஷன் என இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகமாகி உள்ளது. இதில் ஸ்டேன்டர்ட் வேரியண்ட் பைக்கின் விலை ரூ.49 லட்சம். காம்பெடிஷன் வேரியண்ட் பைக்கின் விலை ரூ.55 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுடெல்லியில் எக்ஸ்-ஷோரூம் விலை. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் டெலிவரி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

999 சிசி என்ஜின், 3.1 நொடிகளில் பூஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை இந்த பைக்கில் எட்டலாம். இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 314 கிலோமீட்டர். ஏபிஎஸ், ஸ்லைட் கன்ட்ரோல், 7 டிரைவ் மோட், சிக்ஸ் ஸ்பீடு கியர்பாக்ஸ், நான்கு சிலிண்டர் மோட்டார் 211bhp மற்றும் 113Nm, ஹில் ஸ்டார்ட், ஜிபிஎஸ் லேப் ட்ரிக்கர், ட்யூயல் டிஸ்க் உட்பட பல்வேறு அம்சங்களை இந்த வாகனம் கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE