விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்- வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது

By வி.தேவதாசன்

வேளாண்மைப் பணிகளுக்கான ஆள் பற்றாக் குறை என்பது இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு வேளாண் பணிகள் தற்போது இயந்திரமயமாகி வருகின்றன. இச்சூழலில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தும் விதத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை குறைந்த வாடகையில் வழங்கி வருகிறது.

சிறு பாசன திட்டத்தின்கீழ் பாசன ஆதாரங்களை மேம்ப டுத்தவும், பாசனப் பரப்பினை நிலைப்படுத்திடவும், மேற் பரப்பு மற்றும் நிலத்தடிநீரை ஒருங்கிணைத்து பாசனம் செய்து வேளாண் உற்பத் தியை பெருக்கிடவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அந்த வகையில், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு இரண்டு வகையான கருவிகளை வேளாண்மைப் பொறியியல் துறை வாடகைக்கு வழங்குகிறது. சுழல் விசைத்துளை கருவி மூலம் 6 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.120 என்றும், 8 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.130 என்றும் மற்றும் 10 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.140 என்றும் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெர்குசன் விசைத்துளை கருவி மூலம் 8 அங்குல ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 300 வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

நில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வயல் பரப்பை சமப்படுத் துவதற்காக புல்டோசர்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 950 வாடகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர வேளாண் பணிகளுக்கு நிலங்களை தயார் செய்யவும், உழுது பண்படுத்திடவும் டிராக்டர்கள் வாடகைக்கு தரப்படுகின்றன. உளி கலப்பை, சட்டி கலப்பை, கொலு கலப்பை மற்றும் சுழல் கலப்பை வசதி கொண்ட டிராக்டருக்கு விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.390 மட்டும் வாடகையாக செலுத்த வேண்டும்.

மேலும், நெல்நாற்று நடவு செய்யும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,030 என்ற வாடகையில் கிடைக்கிறது. டிராக் செயின் மூலம் வயல்களில் நகரும் நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 1,600 மற்றும் டயர்கள் பொருத்தப்பட்ட நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 940 என்ற வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்கள் ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவிலும் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் செயற் பொறியாளர் அலுவலகமும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. விவசாயிகள் தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

வி.தேவதாசன்- devadasan.v@thehindutamil.co.in

தகவல் பலகை

வேளாண்மை பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுக கீழ்காணும் தொலைபேசி எண்களில் அலுவலக நேரங்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

காஞ்சிபுரம் 044 24327238

திருவள்ளூர் 044 27663843

விழுப்புரம் 04146 227788

கடலூர் 04142 292358

வேலூர் 0416 2266603

திருவண்ணாமலை

04175 232908

சேலம் 0427 2415266

நாமக்கல் 04286 275472

தருமபுரி 04342 230948

கிருஷ்ணகிரி 04343 232959

கோயம்புத்தூர்

0422 2434838

ஈரோடு 0424 2262067

திருப்பூர் 0421 2217574

நீலகிரி 0423 2443734

திருச்சி 0431 2419447

புதுக்கோட்டை 04322 221816

கரூர் 04324 255850

அரியலூர் 04329 220945

பெரம்பலூர் 04328 224351

தஞ்சாவூர் 04362 235570

திருவாரூர் 04366 241577

நாகப்பட்டினம் 04365 221083

மதுரை 0452 2678639

திண்டுக்கல் 0451 2432293

தேனி 04546 253439

விருதுநகர் 04562 252192

ராமநாதபுரம் 04567 232493

சிவகங்கை 04575 240213

திருநெல்வேலி 0462 2551312

தூத்துக்குடி 0461 2430687

கன்னியாகுமரி 04652 278381

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்