ஆம்ஸ்டர்டாம்: ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. அது குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 2005 முதல் 2018 வரை விளையாடி உள்ளார் சுரேஷ் ரெய்னா. 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி மொத்தம் 7,988 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் குவித்துள்ளார்.
“ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உணவு மற்றும் சமையலில் எனது ஆர்வம் என்ன என்பது குறித்து முக்கிய இடத்தை இது பெறுகிறது. உணவின் மீது எனக்குள்ள பிரியத்தை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் உணவு முறையை ஐரோப்பாவின் இதய பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். நிச்சயம் இங்கு ருசியான உணவு கிடைக்கும்.
வெகு விரைவில் இதன் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த சாகசப் பயணத்தில் என்னுடன் இணைந்திருங்கள்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.
» மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» 'நான் ரெடி' பாடல் | ரசிகர் எடிட் செய்த விராட் கோலி வெர்ஷன்!
முக்கிய செய்திகள்
வணிகம்
58 mins ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago