சென்னை | கார் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் அனுபவம் தரும் விஆர்/ஏஆர் எக்ஸ்பீரியன்ஸ் மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான, 99 ஆண்டு பாரம்பரியம் கொண்ட எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி ஸ்டூடியோஸ் (MG StudioZ) என்ற தனித்துவமான நிஜ அனுபவத்தை வழங்கும் டிஜிட்டல் மையத்தை நேற்று முன்தினம் தொடங்கியது.

விர்ச்சுவல் ரியாலிட்டி ( விஆர்) / ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் இந்த ஸ்டூடியோ எம்ஜி பிராண்டின் அனைத்து கார் ஆர்வலர்களையும் நெருக்கமாக அழைத்துச் செல்லும். எம்ஜி ஸ்டூடியோஸில் டிஜிட்டல் முகப்புத் திரை, வீடியோ வால் கான்ஃபிகரேட்டர், விஆர் / ஏஆர்-வுடன் கூடிய பிரம்மாண்டமான விஷுவலைசர் போன்ற அம்சங்கள் உள்ளன.

எம்ஜி காரின் அனுபவத்தை இது வழங்குகிறது. இதன் தொடக்க விழாவில் எம்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகனமான காமெட் ஈவி, நாட்டின் முதல் ப்யூர்-எலக்ட்ரிக் இன்டர்நெட் எஸ்யூவி வாகனமான இசட்எஸ் ஈவி ஆகிய கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

புதிய தொடக்கம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன சந்தைப்படுத்துதல் தலைவர் உதித் மல்ஹோத்ரா கூறும்போது, “சென்னையில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் இந்த முதல் டிஜிட்டல் ஸ்டூடியோவானது ‘டிஜிட்டல் புதுமைகளைக் கண்டறிவது மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை கடைபிடிப்பது’ ஆகியவற்றில் எங்கள் பிராண்ட் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஓர் உதாரணமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கார்களை வாங்கும் அனுபவத்தை நாங்கள் மேம்படுத்தவுள்ளோம்” என்றார்.

இளைஞர்களை மனதில் கொண்டு உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோ, இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வசீகரமான அம்சங்களையும் கொண்டுள்ளது. எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

வணிகம்

52 mins ago

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்