மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 195 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயர்வடைந்து 63,523 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்ந்து 18,856 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 170.45 புள்ளிகள் உயர்வடைந்து 63,498.15 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 39.15 புள்ளிகள் உயர்ந்து 18,855.85 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் சாதனை உச்சத்தைக் கடந்து புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 260 புள்ளிகள் வரை உயர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கு 63,588.31 ஆக உயர்ந்து புதிய உச்சமடைந்தது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி சென்செக்ஸ் 63,583 ஆக உயர்வடைந்திருந்தது. இதற்கிடையில் நிஃப்டி 18,875.90 வரை உயர்ந்து, அதன் முந்தைய சாதனையான 18,887 -ஐ 12 புள்ளிகளில் தவற விட்டது.
வலுவான மேக்ரோ பொருளாதாரக் காரணிகள் இந்தியாவை வேகமான பொருளாதார வளர்ச்சி வகுத்துக்கொடுத்திருப்பதும், நீடித்த வெளிநாட்டுநிதி வருகையும் பங்குச்சந்தை சாதனை உச்சம் அடைய உதவியிருக்கிறது என்று பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்தாண்டில் சென்செக்ஸ் 4 சதவீதம் உயர்வடைந்து, ஆசிய பங்குச்சந்தைகளில் முதலாவதாக புதிய உச்சம் தொட்டிருக்கிறது.
» உலகின் டாப் 20 விமான நிறுவனப் பட்டியலில் இந்தியாவின் ‘விஸ்தாரா’ - ‘இண்டிகோ’வுக்கு 43-ம் இடம்
» இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்ய விரும்புகிறோம்: டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 195.45 புள்ளிகள் உயர்வடைந்து 63,523.15 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.10 புள்ளிகள் உயர்ந்து 18,856.80 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் உயர்வு அடைந்திருந்தன.
எம் அண்ட் எம், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, நெஸ்டலே இந்தியா, டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago