மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 216 புள்ளிகள் (0.34 சதவீதம்) சரிவடைந்து 63,168 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70 புள்ளிகள் (0.37 சதவீதம்) சரிந்து 18,755 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் அதன் உச்சபட்ட ஏற்றத்திற்கு மிக நெருக்கமாக தொடங்கின. என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவில் பயணிக்கத் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 11.81 புள்ளிகள் சரிவடைந்து 63,372.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.50 புள்ளிகள் சரிந்து 18,812.50 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலப்பு சூழல், முதலீட்டாளர்களின் லாபம் குறித்த நகர்வு காரணமாக தொடக்கநிலை ஏற்றத்தைத் தவறவிட்ட பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியில் நிறைவு செய்தன. நிலையில்லாத வர்த்தகத்தில் எதிர்கால லாபம் குறித்து முதலீட்டாளர்கள் அச்சமடைந்ததால் பங்குச்சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டத் தவறியது. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் சாதனை உச்சமான 63,583 க்கு அருகில் சென்று 8 புள்ளிகள் குறைவாக 63.574 வரை உயர்ந்து .
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 216.28 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 63,168.30 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.50 புள்ளிகள் வீழ்ந்து 18,755.50 ஆக இருந்தது.
» கேரளா, குடகு பகுதிகளில் அறுவடை முடிவதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடும் உயர்வு
» உலக ஜிடிபி பங்களிப்பில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுக்கும் - அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி பங்குகள் உயர்வடைந்திருந்தன.
கோடாக் மகேந்திரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago