ஜூலை 11-ம் தேதி 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதிநடைபெற உள்ளது. போலி ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டுக்கு வரி விதிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது

ஆன்லைன் விளையாட்டு, கேசினோ, குதிரைப் பந்தயம் தொடர்பான வரி குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஜூலை மாதக் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சென்ற நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், போலி ஜிஎஸ்டி பதிவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சோதனை நடத்தும் பணியில் மத்திய, மாநில வரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE